இன்றைய ராசி பலன்கள் 14/11/2020
மேஷம்
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். தொழில், வியாபார சம்பந்தமாக எடுத்த முயற்சியிலிருந்த குழப்பங்கள் அகலும். வாங்கல் - கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். தொழில் ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
மிதுனம்
கோரிக்கைகள் நிறைவேறும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். வீட்டுப் பாராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
கடகம்
நன்மைகள் நடைபெறும் நாள். பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுச் செலவுகளைத் தவிர்க்க புதிய வாகனம் வாங்கலாமா? என்ற எண்ணம் உருவாகும்.
சிம்மம்
தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வித்திடும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும்.
கன்னி
இன்றைய ராசி பலன்களஉள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
துலாம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சகம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. திடீர் பயணம் தித்திக்க வைக்கும். திட்டமிடாத காரியமொன்று நல்ல விதமாக நடைபெறும். குடும்ப பொறுப்புகள் கூடும்.
தனுசு
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
மகரம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கும்பம்
சந்திரபலக்குறைவால் சச்சரவுகள் அதிகரிக்கும் நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவினர்களின் பகை மாறும்.
மீனம்
எதையும் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் பகை அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கமாட்டார்கள்.