கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவி

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறார்.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். 

 

 கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.

 

சிரஞ்சீவி

 

 படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியானது.. இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.

 

இந்நிலையில் சிரஞ்சீவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.