வாத்தி கம்மிங் ஒத்தே.... மாஸ்டர் படக்குழு போட்ட ஒரே டுவிட் - உற்சாகத்தில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

 

கடந்த சில மாதங்களாக இப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து தீபாவளிக்காவது டீசர், டிரெய்லர் என எதையாவது வெளியிடும்படி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

 

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதாக மாஸ்டர் படக்குழு டுவிட் செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும்பாலும் இது டீசர் குறித்த அறிவிப்பாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.