பெண் ஒருவருக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த நபரை எச்சரித்த பொலிசார்

பெண் ஒருவருக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த நபரை எச்சரித்த பொலிசார்

வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞர் ஒருவரை இன்று கைது செய்து கடுமையாக எச்சரித்த பின் பொலிசார் விடுவித்துள்ளனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் இளம் குடும்ப பெண் ஒருவரது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்ச்சியாக இளைஞர் ஒருவரால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணும், அவரது கணவரும் குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞன் வேலை செய்யும் அரச அலுவலகத்திற்கு சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டையடுத்து குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.