படகு மோதி கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்...!

படகு மோதி கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்...!

பத்தரமுல்லை - தியவன்னாஓயா - பொல்துவ பாலத்திற்கு அருகில் பாதுகாப்பு வலையை அகற்றி நாடாளுமன்ற வலயத்திற்குள் நுழைய முற்பட்ட படகு ஒன்று பாதுகாப்பு பிரிவினரின் படகில் மோதி இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவரும் மேலும் ஒருவரும் தியவன்னா ஓயாவில் மீன்களை பிடிப்பதற்காக படகில் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்கமுவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன் மற்றைய நபரை காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்தநிலையில் காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினரும் சுழியோடிகளும் ஈடுபட்டு வருவதாக வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.