இன்றைய ராசி பலன்கள்10/11/2020

இன்றைய ராசி பலன்கள்10/11/2020

மேஷம்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றி ஏற்படும் சிரமத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


மிதுனம்

மிதுனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


கடகம்

கடகம்:  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போதும் சாலைகளை கடக்கும் போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை விட்டு கெடுத்து பேசுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.


தனுசு

தனுசு: புதிய பாதையில் பயணத்தை தொடங்குவீர்கள். குடும்பத்தின் அறிவுரைகளை கேட்டு அறிந்து  செயல்படுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். கவனமுடன் செயல்படவேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: கொஞ்சம் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களின் புதிய முயற்சிகளை ஆதரிப்பார்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.


மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்துஎல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.