முடங்கியது கிளிநொச்சியின் ஒரு பகுதி - பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

முடங்கியது கிளிநொச்சியின் ஒரு பகுதி - பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஒரு நாள் தற்காலிக சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜெயபுரம் கிராம சேவையாளர் பகுதியில், கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் சமூக முடக்கலை மீறிச் செயற்பட்டமையாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த கிராமத்திற்குள் உட்செல்லல் மற்றும் வெளியேறுதல் ஆகியன தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அவசர அறிவிப்பு நேற்றிரவு பொது மக்களுக்கு ஒலிபெருக்கி ஊடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.