கடந்த ஜூலை முதல், நாடு முழுவதும் 11 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு

கடந்த ஜூலை முதல், நாடு முழுவதும் 11 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பதிவுக்கான (உதயம் சான்றிதழ்) புதிய ஆன்லைன் முறை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய முறை வாயிலாக இதுவரை 11 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. இதில் 9 லட்சத்து 26 ஆயிரம் பதிவுகள் நிரந்தர கணக்கு எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மொத்த பதிவில் 1 லட்சத்து 73 ஆயிரம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெண்கள் ஆவார்கள்.

 


நாடு முழுவதும் உள்ள மொத்த பதிவில் முறையே மராட்டியம், தமிழகம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையிலான பதிவுகளை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நிரந்தர கணக்கு எண் மற்றும் ஜி.எஸ்.டி. வரி எண் இல்லாமல் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.