கடந்த சில மணிநேரத்தில் ரஷ்யாவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்
கடந்த சில மணிநேரங்களில் சர்வதேச ரீதியில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ரஷ்யாவில் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு, 20 ஆயிரத்து 396 பேர் இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிககை 17 இலட்சத்து 53 ஆயிரத்து 251ஆக பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த தொற்றுக்குள்ளாகி இதுவரையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 251ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.