அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்! தப்பியோடிய நபர்

அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்! தப்பியோடிய நபர்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் ஆனையிறவு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்றை தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வாகனம் சேதமடைந்தததுடன் வாகனத்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டுள்ள நிலையில் அது கள்ள மணலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.