கொரோனாவால் இறப்பவர்களை எரிப்பதா? இறுதிக் கிரியைகள் தொடர்பில் கோட்டாபயவுக்கு எழுதப்பட்ட கடிதம்

கொரோனாவால் இறப்பவர்களை எரிப்பதா? இறுதிக் கிரியைகள் தொடர்பில் கோட்டாபயவுக்கு எழுதப்பட்ட கடிதம்

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்கள் தொடர்பான இறுதிக் கிரயைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிங்கள் தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர, கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத அடிப்படைவாதிகள் எப்போதும் தமது மதத்திற்கு விசேட சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் தற்கொலை தாக்குதல் நடத்தும்படியான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

இப்படியான கோரிக்கை அனைத்து முஸ்லிம் மக்களின் கோரிக்கையல்ல, இது மத அடிப்படைவாதிகளின் கோரிக்கை என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதால், இந்த கோரிக்கைக்கு அடிப்பணிந்து தவறான முன்னுதாரணத்தை வழங்க வேண்டாம்.

மத அடிப்படைவாதிகளுக்கு கீழ்படிந்து செயற்படுவதாக தென்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த நடைமுறைப்படுததப்பட்டுள்ள விதிமுறைகளை மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற மனநிலை மகக்ள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தகனம் செய்வதை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்தும் எதிர்த்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் அனைவரையும் இன, மத பேதமின்றி தகனம் செய்ய வேண்டும் என தொழிறிநுட்ப குழுவினர் எடுத்த தீர்மானத்தை மீண்டும் மறு பரீசிலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எமக்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறு மதம் மற்றும் இன அடிப்படையில் பல்வேறு அடிப்படைவாதிகளின் தூண்டுதல்களுக்கு அமைய நடைமுறையில் இருக்கும் சட்டம், நடைமுறைகள், விதிமுறைகளை அல்லது கொள்கைகளை மாற்றுவோ, மீளாய்வு செய்யவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது தவறான முன்னுதாரணம் தயவுடன் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குணதாச அமரசேகர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.