தவறான தகவல்களை வழங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தவறான தகவல்களை வழங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் வகையில் தவறான தகவல்களை வழங்குவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் வைத்து பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தனி நபர்கள் மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதுபோன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் தவறான விவரங்களை பதிவு செய்யும் எந்தவொரு நபரும் மோசடி செய்கிறார் என்றே அர்த்தப்படும்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.