இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்! காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்! காரணம் கண்டுபிடிக்கப்பட்டது

அண்மையில் பாணந்துறை கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரையொதுங்கியமை பெரும் கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதற்கான காரணத்தை தற்போது சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் பல நாடுகள் நடத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியின் காரணமாகவே இவ்வாறு திமிங்கலங்கள் கரையொதுங்கியதாக தெரியவந்துள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய “மலபார்” என்ற கடற்படை பயிற்சியால் திமிங்கலங்கள் சிக்கித் தவித்ததாகவும், இதன் காரணமாகவே அவை கரையொதுங்கியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்தார்.

2 ஆம் திகதி மதியம் பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கலங்கள் கரையொதுங்கி இருந்தன.

பின்னர், கடற்படை, காவல்துறை, மக்கள் என அனைவரும் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.