அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்!
நாட்டில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் 8 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஊரடங்கினை அமுல்ப்படுத்துதல், பிரதேசங்களுக்கிடையிலான எல்லைகளைக் கடத்தல், கொவிட் 19 குறித்த தரவுகளை ஜி.பி.எஸ் முறைகளுக்குட்படுத்துதல், முக்கிய வலயங்களில் ஊரடங்கினை அமுல்ப்படுத்துதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய தீர்மானங்களை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது.
மேலும் குறித்த பரிந்துரைகள் தற்போதைய கொரோனா பரவல் நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு குறித்த பரிந்துரைகள் தீர்வுகளை பெற்றுத்தரும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே குறித்த பரிந்துரைகளை உரிய முறையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கையாள வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
