சுய தனிமைப்படுத்தலை தீவிரமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுய தனிமைப்படுத்தலை தீவிரமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுய தனிமைப்படுத்தல்களை தீவிரமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் தொடர்பில் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதிலும் சுமார் 31457 வீடுகளில் 84000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் மட்டும் 40,676 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் ஊரடங்குச் சட்டத்தின் பின்னரும் உரிய முறையில் கண்காணிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் ஒழிப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால் தொற்றாளியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருக்கும் பிரதேசம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தேவை ஏற்பட்டால் அந்தப் பகுதிகளையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.