
வளிமாசு நிலைமை தற்போது சீரடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...!
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய வளிமாசு நிலைமை தற்போது சீரடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிரி இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி மாற்றம் காரணமாக வளி மாசடைந்து காணப்பட்டது.
எனினும் இந்த நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது.
இதற்கமைய கடந்த வாரத்தில் வடக்கு பகுதியிலேயே அதிகளவில் வளி மாசடைந்து காணப்பட்டது.
இந்தியாவில் நிலவுகின்ற மாசடைந்த வளி நிலையானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தியது.
எவ்வாறாயினும் அந்தநிலை மாற்றமடைந்து கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களிலும் வளியில் காணப்படும் மாசுகள் குறைவந்துள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிரி குறிப்பிட்டார்.