
ஊரடங்கு உத்தரவை மீறிய 200 பேர் கைது..!!
இன்றுஅதிகாலை 5 மணியுடன்நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், ஊரடங்குசட்டத்தைமீறியகுற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை பேச்சாளர் பிரதி காவல் துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன்போது 18 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம், முகக்கவசங்கள் இன்றி சமூக இடைவெளியை பேணாமல் செயற்பட்ட மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.