சுய தனிமைப்படுத்தலின் கீழ் 89,000 பேர்

சுய தனிமைப்படுத்தலின் கீழ் 89,000 பேர்

நாட்டில் 89,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22,000 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் 3 மாவட்டங்களில் மாத்திரம் 12,000 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள ஒருவரேனும் வீடுகளிலிருந்து வௌிவரும் பட்சத்தில் அந்த செயற்பாடும் குற்றமாக கருதப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.