நான் பெருமைப்படுகிறேன்! நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்

நான் பெருமைப்படுகிறேன்! நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிசி) இணைந்து கூட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஏற்பட்டினை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றதுடன் அது தொடர்பில் ட்வீட் செய்துள்ளார்,

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றமைக் குறித்து தாம் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மட்டத்திலும் மக்கள் மட்டத்திலும் நிறுவன ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக்கருத்தரங்கு அமைந்திருந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.