மீள திறக்கப்படவுள்ள கல்வி அமைச்சின் அலுவலகம்..!

மீள திறக்கப்படவுள்ள கல்வி அமைச்சின் அலுவலகம்..!

கொவிட்19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய கல்வி அமைச்சின் அலுவலகம் இன்று முதல் மீள இயங்கவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இன்றைய தினம் முதல் இந்த கட்டிடத்தின் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.