இன்றைய ராசி பலன்கள் 05/11/2020

இன்றைய ராசி பலன்கள் 05/11/2020

மேஷம்

உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. தொலைபேசி வழிச் செய்திகளால் உற்சாகம் பெருகும்.

ரிஷபம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச்செலவுகள் ஏற்படலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

கடகம்

செல்வாக்கு உயரும் நாள். பொதுநல ஈடுபாட்டால் புகழ் காண்பீர்கள். உடன் பிறப்புகள் உறுதுணைபுரிவர். நிதிப்பற்றாக்குறை அகலும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண வாய்ப்பு கைகூடும்.

சிம்மம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னேற்றம் அதிகரிக்க முக்கியப்புள்ளிகளின் ஒத்துழைப்புடன் தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.

கன்னி

மனக்குழப்பம் அகலும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் இருமடங்காகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

விருச்சகம்

யோசித்துச் செய்ய வேண்டிய நாள். தொழிலில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்ள மாட்டார்கள். உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

தனுசு

இன்றைய ராசி பலன்கள்கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். செயல்பாடுகளில் அவசரம் காட்ட வேண்டாம்.

மகரம்

புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புகழ் கூடும். வீடு, இடம் வாங்குவதில், விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் மாறும். பிள்ளைச் செல்வங்களால் பெருமை வந்து சேரும்.

கும்பம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நடக்குமா, நடக்காதோ என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சி தரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

மீனம்

ஆற்றல் மிக்கவர்களைச் சந்தித்து ஆனந்தமடையும் நாள். வியாபார முன்னேற்றம் உண்டு. திருமண வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களிடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டு அகலும்.