வனப்பகுதி அழிக்கப்பட்டு இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது-குற்றம்சாட்டும் மக்கள்

வனப்பகுதி அழிக்கப்பட்டு இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது-குற்றம்சாட்டும் மக்கள்

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விருந்தோடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வனப்பகுதி ஒன்று அழிக்கப்பட்டு, இறால் வளர்ப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முந்தல் பிரதேச செயலாளரை எமது செய்தி சேவைத் தொடர்புகொண்டு வினவியபோது, இந்த சம்பவம் தொடர்பாக ஏலவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.