நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
இலங்கையில் இன்று மேலும் 274 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 7 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களைச் சேர்ந்தவர்கள்.
267 ஏற்கனவே தொற்றுறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் இதுவரையில் 12 ஆயிரத்து 018 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 137 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தொற்றா நோய்கள் அல்லது சுவாசப்பிரச்சினைகள் இருப்பின், உடனடியாக வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின், சமுதாய வைத்திய நிபுணர் ஷெரின் மெனுவேல்பிள்ளை பாலசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.