வாகன வருமான அனுமதி பத்திர விநியோகம் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகன வருமான அனுமதி பத்திர விநியோகம் தொடர்பாக விசேட அறிவிப்பு!

மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து, மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மேல்மாகாணத்தில் அமுல்பட்டுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல்வரை மேல்மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வாகன வருமான அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.