அரசாங்க ஊழியர்களின் ஆடைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்க ஊழியர்களின் ஆடைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் பற்றிக் ஆடை அணிந்து வர வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்கள் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பற்றிக் ஆடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கைத்தறி மற்றும் புடவை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.