கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்- திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்!

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்- திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் வண்ணாமோட்டை பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 555 கிராம் கேரள கஞ்சா மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்புரைக்கமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மற்றும் மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி C.P.ஐயதிலகவின் வழிகாட்டலில் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையிலான குழுவினரே மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா உயிலங்குளம் வண்ணாமோட்டை காட்டுப் பகுதிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின் இன்றைய தினம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மாவட்ட நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.