
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கோவை..!
நாட்டில் கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறைபடுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழிகாட்டல் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழிகாட்டல் கோவை சுகாதார அமைச்சருக்கும் கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டுமையத்தின் பிரதானிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தமது பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தற்போது அசாதாரண சுகாதார நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் இதனை கட்டுபடுத்த மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அந்த ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.