பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி..!

பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி..!

காட்டு யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மின்சாரவேலிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக, தொடருந்து திணைக்களத்தால் அகற்றப்பட்ட தண்டவாளங்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

19 மாவட்டங்களில் 133 பிரதேச செயலக பிரிவுகளில் காட்டு யானை பிரச்சினை உள்ளது.

குறித்த 133 பிரதேச செயலக பிரிவுகளிலும், 4 ஆயிரத்து 500 கிலோமீற்றருக்கு மின்சாரவேலி மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் மேலும் ஆயிரத்து 500 கிலோ மீற்றர் மின்சாரவேலி மற்றும் பாதுகாப்பு வேலியுடன் கூடிய காட்டு யானை பாதுகாவல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கும் அமைச்சரவையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட தொடருந்து தண்டவாளங்களை இதற்காக பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தண்டவாளங்களை இலசமாக பெற்றுக் கொள்வதற்காக, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.