மன்னாரில் கஞ்சா மீட்பு...!
மன்னார் - உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து 20 கிலோ 555 கிராம் எடைகொண்ட கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ள கஞ்சாவானது எவரேனும் சிலரால் கைவிடப்பட்டு சென்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.