மினுவாங்கொடை கொத்தணி – 2 இலட்சத்தைக் கடந்த பி.சி.ஆர். பரிசோதனை

மினுவாங்கொடை கொத்தணி – 2 இலட்சத்தைக் கடந்த பி.சி.ஆர். பரிசோதனை

மினுவாங்கொடை கொத்தணியில்  இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி  இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 819 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 2 இலட்சத்து 6 ஆயிரத்து 422 பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், 7 ஆயிரத்து 582 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி  மேலும் தெரிவித்துள்ளது.