கரையொதுங்கிய திமிங்கிலங்கள்...! படங்கள் காணொளி இணைப்பு..!
பாணந்துறை கடற்கரையில் 50 முதல் 100 வரையிலான திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த திமிங்கிலங்கள் உயிருடன் காணப்படுவதாகவும் திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 18 திமிங்கிலங்கள் கடலுக்குள் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திமிங்கிலங்கள் கரையொதுங்கியதுடன் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை எவரும் வருகை தரவில்லை என கரையோர வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.