
கொழும்பு நகர சபையில் ஒருவருக்கு கொரோனா...!
பலபிட்டி - பிராமணவத்தை பகுதியில் வசிக்கும் கொழும்பு நகர சபையில் கடமையாற்றும் தொழில் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
43 வயதுடைய குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி அவரின் வீட்டிற்கு சென்று மீண்டும் கடந்த 25 ஆம் திகதி நகர சபைக்க பணிக்கு திரும்பியதன் பின்னர் கடந்த 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.