ஒஸ்ரியாவின் மத்திய பகுதியில் கொடூரமாக இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதல்! பலர் இறந்திருக்கலாம் என அச்சம்
ஒஸ்ரியா மத்திய வியன்னாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் Karl Nehammer இந்த சம்பவம் வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் ஆறு இடங்களில் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“It seems that they are still looking and basically trying to hunt down the perpetrators.”
— SkyNews (@SkyNews) November 2, 2020
Journalist Denise Hruby describes the scene in central Vienna, following shootings involving multiple attackers.
Get the latest here: https://t.co/TUb9DAtFXo pic.twitter.com/qEcbm0C209
இதன்போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், வழிப்போக்கர்கள் உட்பட பலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒஸ்ரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியை தவிர்க்கவும், பொதுப் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்.
நகர மையத்தை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இது ஒரு வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல் என்று நாங்கள் நம்புகிறோம் என்பதை இப்போது நான் உறுதிப்படுத்த முடியும் என உள்துறை அமைச்சர், Karl Nehammer கூறியுள்ளார்.