சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; அச்சத்தில் உலக நாடுகள்

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; அச்சத்தில் உலக நாடுகள்

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்; அச்சத்தில் உலக நாடுகள் | New Virus Spreading Rapidly In China World In Fearமேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் பல வைரஸ்களின் தாக்கம் வேகமாக பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வைரஸ் பரவல் நிலை குறித்து சீன அதிகாரிகள் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.