கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி இனம் காணப்பட்டார்
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் இன்று இனம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் உணவகத்தில் பணியாற்றும் பணியாளர் சொந்த இடமான கிளிநொச்சி தர்மபுரம் பகுதிக்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கொவிட் -19 தொற்று நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரியின் சாதூரியமான செயற்பாட்டால் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது உறவினர் ஒருவர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நிலையில் அவர் கடந்த மூன்று தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முல்லைத்தீவில் 68 ஆவது படைப்பிரிவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த இருவரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.