
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் பணியாற்றும் பகுதியினை கவனத்திற்கு எடுக்கும் போது, மிக சிலருடனேயே தொடர்பில் இருந்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய உரிய பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலான பணியாளர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைய குறித்த சுகாதார நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.