பிள்ளையான் கலந்துகொள்ள முடியும்: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

பிள்ளையான் கலந்துகொள்ள முடியும்: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சிநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று அதன்மூலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்ற கட்டளையூடாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரும் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதியினை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி இந்த நகர்த்தல் பிரதி தாக்கல் செய்யப்பட்டபோதும் 26ஆம் திகதி நீதிமன்றம் கட்டளைக்கு நியமித்திருந்தது ஆனால் கொவிட்-19 தாக்கம் காரணமாக குறிப்பிட்ட திகதியில் வழக்கு நடைபெறவில்லை.

அதனால் 2ஆம் திகதிக்கான கட்டளைக்கு நியமிக்கப்பட்டிருந்தது ஆயினும் இன்று மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறவில்லை.

ஆனாலும் இந்த கட்டளைக்கான விசாரணை நீதிபதி ரீ.சூசைதாஸன் தலைமயில் நடைபெற்றது இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று அதன்மூலம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்ற கட்டளையூடாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தினை அணுகும்படி கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரனி ச. மங்களேஸ்வரி தெரிவித்தார்.