இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா!

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா!

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அவர் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பகுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்,

குறிப்பிட்ட ஊழியரின் பணி காரணமாக அவர் தூதரக அலுவலகத்துடனும் அதிகாரிகளுடனும் சிறியளவிற்கே தொடர்பிலிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.