
கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள்
இரண்டாவது கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறிய மற்றும் மத்திய தர ஏற்றுமதியாளர்கள் அதிக அளவிலான பிரச்சனையை எதிர்நோக்குவதாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியாளர் வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரிதியாக உள்ள தொழிற்சாலைகளில் 50 சத வீதமான பணிகளே இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கொரோனா வைரஸ் தொற்றின் போது, உற்பத்தி நிறுத்தப்பட்டது
ஆனால் சந்தை வாய்ப்பு செயல்படவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாம் தாக்கத்தினால், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் உற்பத்தியினை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் மத்திய தர தொழிற்சாலைகள் நாடளாவிய ரீதியாக 60 உள்ளதாக தெரிவித்த ஆடை ஏற்றுமதியாளர் வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம், அதன் மூலம் 35 ஆயிரம் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.