
நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர் குறித்த முழுமையான விபரங்கள்...!
கொவிட் 19 தொற்றால் நாட்டில் 21 ஆவது மரணம் சம்பவித்துள்ளது.
வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் குருதி அழுத்தம் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோனையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த 31 ஆம் திகதி அவர் உயிரிழந்த நிலையில் அதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.