
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றையடுத்து மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் நடவடிக்கை!
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா தொற்றாளர்களின் உறவினர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இன்று வெளி மாவட்டத்திற்கு சென்று வந்து தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்கள் என இருபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இதன் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 284 நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.