பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள், பஸ் சாரதிகளுக்கு கொடுப்பனவு

பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள், பஸ் சாரதிகளுக்கு கொடுப்பனவு

கொரோனா நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாண சபையின் கீழ் பயிற்சி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பஸ் சாரதிகளுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

2020 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை பதிவு செய்துள்ள 4800 சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.