சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள்
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தெஹிவளை, சீதாவாக்க பிரதேச செயலக பிரிவில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 67000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.