கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு..!

கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பு..!

கடற்படையினர் கடந்தவாரத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 29 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

100 கிலோகிராம் கேரள கஞ்சாவும், 950 மில்லிகிராம் அளவுடைய ஐஸ்ரக போதைப்பொருளும் இந்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 34 முதல் 39 ஆகிய வயதுடையவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.