மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்

நாட்டின் 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

24 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதால் நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது

இரண்டாம் தவனை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்கான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதிலளித்து சுகாதார அமைச்சகம் அடுத்த வாரம் கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலை பள்ளிகளை திறக்க ஏற்ற காலம் இல்லை என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

பள்ளிகளைத் திறக்க வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் கோவிட் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஜனாதிபதியின் தலைமையில் தினசரி நடைபெறும் கோவிட் அடக்குமுறைக் குழுவுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன தெரிவித்தார்.