வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் அழைத்துவரப்பட்டனர்
கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அபுதாபியில் இருந்து 6 பயணிகளும் கட்டாரிலிருந்து 12 பயணிகளும் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வந்த 508 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.
இதனடிப்படையில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்த 60,079 பேர் வீடு திரும்பியுள்ளதாக COVID-19 தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 ,760 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் 12,106 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை 5,02,669 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.