
இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்த வகையைச் சேர்ந்ததா..? வெளியான அதிர்ச்சி தகவல்
மினுவங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் வகையானது ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் வைரஸ் வகையைச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வகை வைரஸின் மரபணுக்களை சோதனைக்கு உட்படுத்திய பின்னரே குறித்த விடயம் வெளியானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிக்கையானது இன்றைய தினம் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.