ஏனைய மாகாணங்களில் இருந்து மேல் மாகாணத்திற்கு சுகாதார ஊழியர்களை அழைத்து வர நடவடிக்கை
மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஏனைய மாகாணங்களில் இருந்து சுகாதார ஊழியர்களை அழைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், நோயாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு தேவையான சுகாதார ஊழியர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் குறைந்தளவு நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளிலிருந்து சுகாதார ஊழியர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.