அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

இந்த நிலையில், நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆயிரத்து 842 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், அதற்குள் 112 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.