தனிமைப்படுத்தலின் கீழ் வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தனிமைப்படுத்தலின் கீழ் வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலின் கீழ் தமது வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கும் திட்டம் ஒன்றினை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது.

இதற்கு அமைய குடும்பங்கள் இரு முறை தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான மரக்கறி, பழ வகைகள் மற்றும் உலர் உணவு வகைகள் என்பனவற்றை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக நடவடிக்கைகளுக்கு இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த திட்டத்திற்கு அமைய கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 807 குடும்பங்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளை சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவு தொகை கடந்த வாரத்தில் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.